spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூட்டை மாற்றிய பிரேம்குமார்.... எதிர்பாராத காம்போவில் புதிய படம்.... தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

ரூட்டை மாற்றிய பிரேம்குமார்…. எதிர்பாராத காம்போவில் புதிய படம்…. தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

-

- Advertisement -

பிரேம்குமாரின் அடுத்த படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.ரூட்டை மாற்றிய பிரேம்குமார்.... எதிர்பாராத காம்போவில் புதிய படம்.... தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் ’96’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் பிரேம்குமார். அதாவது ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் மென்மையான காதல் கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் முக்கியமான இடத்தை பிடித்து விட்டார். அடுத்தது ‘மெய்யழகன்’ என்ற அருமையான, அழகான, அமைதியான படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். ரூட்டை மாற்றிய பிரேம்குமார்.... எதிர்பாராத காம்போவில் புதிய படம்.... தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!இதைத் தொடர்ந்து இவர், விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதற்கிடையில் இயக்குனர் பிரேம்குமார், தன்னுடைய வழக்கமான ஸ்டைலை தவிர்த்து புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது பகத் பாசில் நடிப்பில் திரில்லர் படத்தை இயக்கப்போவதாக பிரேம்குமாரே சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த புதிய படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரமான அப்டேட் கொடுத்துள்ளார்.

we-r-hiring

அதன்படி அவர், “யாருமே எதிர்பார்க்காத காம்போவில் ஒரு படம் எடுக்கப் போகிறோம். இன்னும் நாங்கள் அதை அறிவிக்கவில்லை. ஆனால் அதை பிரேம்குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விரைவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். பகத் பாசில் தான் ஹீரோ. இந்த படம் இன்னொரு ‘ஆவேஷம்’ மாதிரி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகமாக்கியுள்ளது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ