ரீ ரிலீஸ் செய்யப்படும் பாகுபலி 1 மற்றும் 2 கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது. இந்த படத்தில் ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, நாசர், சத்யராஜ், தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உலக தரத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் இப்படம் இந்திய சினிமாவையே சர்வதேச அளவில் உயர்த்தியது. இவ்வாறு பல்வேறு விருதுகளையும், பல்வேறு சாதனைகளையும் படைத்த இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாகுபலி 1 திரைப்படம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபலி – The Epic என்ற தலைப்பில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கும் நிலையில் மற்றுமொரு சர்ப்ரைஸும் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.
அதாவது பாகுபலி – The Epic படத்தின் இறுதியில் பாகுபலி மூன்றாம் பாகத்திற்கான சர்ப்ரைஸ் ஒன்றை படக்குழு இணைத்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் அது என்னவென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர வருங்காலத்தில் ‘பாகுபலி 3’ திரைப்படம் உருவாகும் என்றால், பிரபாஸ் தன்னுடைய கமிட்மெண்டுகளை எல்லாம் முடித்த பின்னர்தான் அது நடக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது.
ரீ ரிலீஸ் ஆகும் ‘பாகுபலி’ 1 மற்றும் 2…. கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
-
- Advertisement -