பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.
லவ் டுடே, டிராகன் ஆகிய தொடர் வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேசமயம் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லுக்கில் காணப்படுகிறார். அதாவது அவருடைய தோற்றத்தில் ரஜினியின் ஸ்டைல், மாஸ் போன்றவை தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் கீர்த்திஸ்வரன், இப்படத்தின் கதையை இளம் வயது ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதியதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.