spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எல். இளையபெருமாள் – Tamil Nadu Congress Committee

மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவரும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய பெரியவர் எல். இளையபெருமாள் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் வருகிற ஜூன் 26 முதல் நூற்றாண்டு விழா கொண்டாடுவதென முடிவு செய்து, சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணி மண்டபம் கட்டுவதென அறிவித்திருக்கிறார்.

we-r-hiring

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை தான் எனவும், தீண்டாமையை ஒழிக்க, சாதி அமைப்பின் பிடிப்பை உடைக்க வேண்டும் என்ற, இளைய பெருமாள் வழியில் சுயமரியாதை சமூகத்தை அமைப்போம் என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

 

MUST READ