நடிகர் ஹரிஷ் கல்யாண் எமோஷனலாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்த நிலையில் அடுத்தது இவருடைய டீசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இப்படம் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க சண்முகம் முத்துசாமி இதனை இயக்கியுள்ளார். படத்தில் அதுல்யா ரவி, வினய் ராய் ஆகியோர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது நடிகர் ஹரிஷ் கல்யாண், எமோஷனலாக பேசியுள்ளார். அதன்படி அவர், “கிட்டத்தட்ட 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் தேவா சாரிடம் டீசல் படம் தீபாவளிக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டிருக்காங்க. பெரிய ஹீரோ, பெரிய ஹீரோயின், பெரிய டைரக்டர், பெரிய மியூசிக் டைரக்டர் இருக்காங்களா? அப்படின்னு கேட்டு இருக்காங்க.
#HarishKalyan recently said 👀
“I just want to share a few words. A few days ago, someone went and asked Deva Sir — ‘What qualification does this film have to release for Diwali? Is there a big hero, a big director, or a big music director involved?’
pic.twitter.com/DlCLwLbSWD— Movie Tamil (@_MovieTamil) October 14, 2025

அதைக் கேட்டதும் தேவா சார் உண்மையிலேயே மனமுடைந்து போய்விட்டார். எனக்கும் அதை கேட்கும் போது ஒரு மாதிரி வலிக்குது. தீபாவளிக்கு வரதுக்கு அப்படி என்ன தகுதி இருக்கணும்னு எனக்கு தெரியல. நல்ல கன்டென்ட், அதை ப்ரோமோட் பண்ணுவதற்கு நல்ல டீம் இருந்தா கண்டிப்பா வரலாம்தான? பார்வையாளர்களும் ஒருபோதும் அதை விட்டு விடமாட்டார்கள்” என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.