spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரமுக்காக நான் யோசிச்ச கதை இதுதான்.... அவருக்கு ஒரு அங்கீகாரமா இருக்கும்.... மாரி செல்வராஜ் பேச்சு!

துருவ் விக்ரமுக்காக நான் யோசிச்ச கதை இதுதான்…. அவருக்கு ஒரு அங்கீகாரமா இருக்கும்…. மாரி செல்வராஜ் பேச்சு!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் குறித்து பேசி உள்ளார்.துருவ் விக்ரமுக்காக நான் யோசிச்ச கதை இதுதான்.... அவருக்கு ஒரு அங்கீகாரமா இருக்கும்.... மாரி செல்வராஜ் பேச்சு!

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய அடுத்த படமான பைசன்- காளமாடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா, பசுபதி, அமீர், ரஜிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரமுக்காக நான் யோசிச்ச கதை இதுதான்.... அவருக்கு ஒரு அங்கீகாரமா இருக்கும்.... மாரி செல்வராஜ் பேச்சு!அந்த வீடியோவில் அவர், “பைசன் காளமாடன் ஸ்கிரிப்ட் பண்ணனும்னு முடிவு பண்ணும் போது, யாரை வச்சு பண்றதுன்னு மிகப்பெரிய கேள்வி இருந்தது. ஏனென்றால் இந்த படத்தை பண்றது சாதாரண விஷயம் இல்லை. இத பண்றதுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகப்பெரிய உழைப்பை போடக்கூடிய ஹீரோ தேவை. என்னுடைய எனர்ஜிக்கு ஈடு கொடுத்து என் கூட இறங்கி வேலை செய்யக்கூடிய ஒரு ஹீரோ இருந்தா தான் படத்தை பண்ண முடியும். இல்லன்னா பண்ண முடியாது.

we-r-hiring

அந்த நேரத்துல எனக்கு இருந்த ஒரே சாய்ஸ் துருவ் தான். அவருக்காக படம் பண்ணனும்னு முடிவு பண்ணதும், நான் யோசிச்ச கதையும் இதுதான். கிட்டான் என்பது கதாநாயகன் பெயர். நான் சின்ன வயசுல இருந்து பார்த்த கிட்டான அப்படியே தத்ரூபமா கொண்டு வர்றதுக்கு துருவ் போட்ட உழைப்பு ரொம்ப அசாத்தியமானது. சினிமாவுக்காக இந்த வயதில் இவ்வளவு உழைப்பை போட முடியுமான்னு பிரமிக்க வச்சான் துருவ். உண்மையிலேயே துருவ் உழைப்புக்கு’ பைசன்’ படம் ஒரு அங்கீகாரமாக இருக்கும். அப்படிப்பட்ட உழைப்பை உழைத்த துருவுக்கு என் நன்றியை சொல்லிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ