டப்பிங் யூனியனில் இருக்கும் சங்கீதா என்ற பெண்மணியை ஷாஜி என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் டப்பிங் யூனியன் பற்றி சங்கீதா அளித்த பேட்டிகள் தொடர்பாக இன்று (அக்டோபர் 15) பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை கே.கே. நகரில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் ராதாரவி, பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
அப்போது நடிகர் ராதாரவி, “எங்களிடம் உண்மை இருக்கறது. யூனியனில் இதுபோன்று தவறுகள் செய்ய மாட்டார்கள். அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிவிட்டோம். இதுதான் செய்ய முடியும் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வாங்கிவிட்டு வாங்க பிறகு முடிவு செய்துகொள்ளலாம். இந்த முறை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு அநியாயமாக பேசினால் அடுத்த முறையும் நான் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போல் இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் யூனியனுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். யூனியன் உறுப்பினர்களுக்கு நிறைய செய்துள்ளோம்.

பொதுச்செயலாளர் கதிரவன் பேசும்போது, “சங்கீதா என்ற பெண் டப்பிங் சமந்தமாக கூறி இருப்பது அனைத்தும் பொய். கதிரவன் என்னை மிரட்டினார் என்று கூறினார் அந்த பேட்டியில். ஆனால் நாங்கள் மீட்டிங் வைக்கும் பொழுது வரவில்லை. யாருக்கெல்லாம் ராதாரவி நல்லது செய்கிறாரோ அவர்கள் காலை வாரி விட்டு தான் செல்வார்கள். இந்த சங்கத்தில் தப்பு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வரப்போற தேர்தலுக்காக ஒரு குழு இந்த பெண்ணை வைத்து கொண்டு அரசியல் செய்கின்றனர். இந்த சங்கத்தில் இருந்து 1 ரூபாய் கூட எடுக்க முடியாது எல்லாம் digitalized. சங்கீதா பேசியது அனைத்தும் பொய்
டப்பிங் யூனியனில் சேரும் பெண்களை அவதூறாக பேசி உள்ளார். சங்கீதா மற்றும் ஷாஜியின் நடவடிக்கை தொடர்பாகவும், டப்பிங் யூனியன் மீதும் புகார் அளித்தது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாங்கள் தகுந்த ஆதாரத்தை கொடுத்துள்ளோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லாததால் தான் நேரடியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறோம். அதேபோன்று சங்கீதாவிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் புகார் அளித்துள்ள நிலையில், அதற்கான வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அதில் எந்தவித எடிட்டும் செய்யப்படவில்லை.
புகார் மீது என்ன நடவடிக்கை பற்றிய கேள்விக்கு,
சங்கீதா எங்களிடம் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. கடிதம் மட்டும் தான் கொடுத்தார். இரண்டு முறை விசாரணை வைத்தும் அவர் வரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு வந்தார். குற்றம்சாட்டியவர் ஏன் வரவில்லை? இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விடமாட்டோம். தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியுள்ளார். யார் தப்பு செய்தாலும் இந்த யூனியன் நடவடிக்கை எடுக்கும். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு கமிட்டி மூலம் பேசி ஷாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஷாஜி மீது புகார் அளித்ததன் காரணமாக சங்கீதா யூனியனில் இருந்து நீக்கப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தில் நடந்த பிரச்சினை காரணமாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்கீதா புகார் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி அதில் எந்த தகவல்களும் உண்மையில்லை என்று கூறி விசாரணையை முடித்துவைத்தனர். தற்போது அந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சங்கீதா நீக்கப்பட்டதற்கும் ஷாஜி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நான் எல்லோரிடமும் நல்ல முறையில் தான் பேசுவேன். யாரிடமாவது நான் அசிங்கமாக பேசியிருந்தால் எதுக்காக, எப்போது பேசினேன் என்று சொல்ல வேண்டும். ஷாஜி விஷயத்தில் டப்பிங் யூனியன் பற்றி சங்கீதா சொன்னது அப்பட்டமான பொய் உண்மையாக இருந்தால் நிரூபிக்க சொல்லுங்கள். ஒரு யூனியனில் இருந்து கொண்டு மற்ற யூனியன் பற்றி பேசவே கூடாது. வரவுள்ள யூனியன் தேர்தலுக்காக இந்த பெண்ணை ஒரு குரூப் ஆட்டுவிக்கிறார்கள். அதற்கு இவர் பலிகடா ஆகிவிட்டார். சங்கீதா மீது வழக்கு கொடுக்கிறோம் என்றார்.


