பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா, ‘கில்லர்’ படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித்தின் ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, விஜய் நடிப்பில் ‘குஷி’ படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். அதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களையும் இயக்கி இருந்தார். மேலும் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, வீர தீர சூரன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அடுத்தது இவர் ‘எல்ஐகே’ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கில்லர் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் உருவாகி வரும் இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஜே. சூர்யா, ‘கில்லர்’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
#SJSurya Recent
– #Killer is not a car-based film, but the car is a character in the film.pic.twitter.com/snyfcJq4kT— Movie Tamil (@_MovieTamil) October 18, 2025

அதன்படி அவரிடம், கில்லர் திரைப்படம் கார் சம்பந்தப்பட்ட படமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது கார் சம்பந்தப்பட்ட படம் இல்லை. ஆனால் கார் இந்த படத்தில் ஒரு கேரக்டராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஏ.ஆர். ரகுமான் சார் ஏற்கனவே கில்லர் படத்திற்காக இரண்டு பாடல்களை கொடுத்துவிட்டார். தரமான சம்பவம் பண்றாரு” என்று கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்.