விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது ஓர் மாம்பழ சீசனில், இரண்டு வானம், கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்யன் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, நடித்துள்ளார். இதில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இதற்கு இசை அமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது நடிகர் செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக, அதாவது சைக்கோவாக நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. இந்த டிரைலர் இணையத்திலும் வைரலாகி வருகிறது. மேலும் ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு இந்த படம் க்ரைம் திரில்லர் விரும்பிகளுக்கு நல்ல விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.