கருப்பு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இதில் திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யா இந்த படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இது தவிர தெய்வத்தன்மை கொண்ட மனிதனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன. இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
The spark before the fire 🔥
The celebration starts now!Promo of #GodMode from #Karuppu is here. Brace yourself for the roaring mass track tomorrow! 💥
A @SaiAbhyankkar musical. #KaruppuFirstSingle @Suriya_offl @trishtrashers @RJ_Balaji #Indrans @natty_nataraj #Swasika… pic.twitter.com/Ng439fnoLE
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 19, 2025

அடுத்தது இந்த படத்தின் முதல் பாடல் நாளை (அக்டோபர் 20) தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ‘GOD MODE’ எனும் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.