நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில் வில்லனாக நடிக்க விரும்பியதாக கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ‘ராட்சசன்’ எனும் திரைப்படம் வெளியானது. தரமான க்ரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இன்றுவரையிலும் இந்த படம் பெரிய அளவில் பேசப்படுகிறது. தற்போது இதே போல் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஆர்யன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் விஷ்ணு விஷால் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர், “ராட்சசன் படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்கும்போது அதில் வில்லனாக நடிக்க விரும்பினேன். ஏனென்றால் அதில் செயற்கை மேக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த ரோலுக்காக வேறொரு நடிகர் பல மாதங்களாக தயாராகி வருகிறார் என்று இயக்குனர் சொன்னதும் நான் அந்த வாய்ப்பை பறிக்க விரும்பவில்லை. தற்போது அதேபோல ஆர்யன் படத்திலும் செல்வராகவன் சார் நடிக்கும் கதாபாத்திரம் சிறப்பம்சமாக இருக்கும். அந்த கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் கனெக்டானால் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.


