இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். கார்த்தி நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து லோகேஷுக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவருடைய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிக வசூலை வாரிக் குவித்த்து. அதன் பிறகு ரஜினி – லோகேஷ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரூ.1000 கோடியை தட்டி தூக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
எனவே லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தின் மூலம் சிறந்த கம்பேக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தயாரிப்பாளராக வலம் வரும் லோகேஷ் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அதே சமயம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது லோகேஷ் தற்போது தான் ஹீரோவாக நடித்து வரும் படத்திற்கு பிறகு ‘கைதி 2’ படத்தை தான் கையில் எடுக்க உள்ளாராம்.
கிட்டத்தட்ட உறுதியான இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எல்.சி.யு-வின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் லோகேஷுக்கு இழந்த வெற்றியை திரும்ப பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆகையினால் லோகேஷ், கைதி 2 படத்தின் மூலம் வலுவான திரைக்கதையுடன் சிறந்த கம்பேக் கொடுப்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


