spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!

‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'ஜெயிலர் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!

கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி – நெல்சன் – அனிருத் கூட்டணியில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இதன் பின்னர் நெல்சன் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவுப்பு டீசர் வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. 'ஜெயிலர் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கேரளா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் கோவாவில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படப்பிடிப்பில் சில பாலிவுட் நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் நடித்துவரும் நிலையில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 'ஜெயிலர் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!அதே சமயம் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நந்தமுரி பாலகிருஷ்ணா, வித்யா பாலன், பூர்ணா என பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் கசிந்து வருகின்றன. ஆனாலும் இது குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ