spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்.... உடல் வலி பறந்து போகும்!

இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்…. உடல் வலி பறந்து போகும்!

-

- Advertisement -

உடல் வலியை குறைக்கும் கஞ்சி குறித்து பார்க்கலாம்.இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்.... உடல் வலி பறந்து போகும்! உடல் வலி, மூட்டு வலி, தசை சோர்வு ஆகியவற்றை குறைக்க உளுந்து கஞ்சி என்பது மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை அடிக்கடி எடுத்துக் கொள்வதனால் எலும்புகள் பலமாகும். உடல் வலியும் தீரும்.இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்.... உடல் வலி பறந்து போகும்!

தற்போது இந்த உளுந்து கஞ்சி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

we-r-hiring

கருப்பு உளுந்து – அரை கப்
வெல்லம் – இனிப்புக்கு ஏற்ப
தண்ணீர் – 2 கப்
தேங்காய் பால் – அரை கப்
ஏலக்காய் – 1
நெய் – 1 ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை – சிறிய அளவு

செய்முறை:இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்.... உடல் வலி பறந்து போகும்!

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் உளுந்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதன் பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதை சல்லடையில் சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லத்தை உருக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வடிகட்டிய வெல்லத்துடன் அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவையும், தட்டிய ஏலக்காயையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி, அதன் பின்னர் அதை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். (மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்)

உளுந்து வெந்து கட்டியாகி வந்ததும் தேங்காய் பாலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

அதன் பின்னர் கடைசியாக நெய்யில் முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து கஞ்சியில் சேர்த்து இறக்கி விட வேண்டும்.இந்த கஞ்சியை வாரத்துல ரெண்டு நாள் குடிச்சா போதும்.... உடல் வலி பறந்து போகும்!

குறிப்பு:

தேங்காய் பாலிற்கு பதிலாக பால் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கஞ்சியை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வர கை, கால், இடுப்பு வலி, உடல் வலி, மூட்டு வலி போன்றவை பறந்து போகும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் வந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ