ரஜினியின் கடைசி படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினி. இவர் தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அதாவது இன்றைய இளம் நடிகர்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஸ்டைல், மாஸ் என எதிலுமே, எப்பவுமே, தான் குறைந்த ஆளில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் அடுத்தடுத்த படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ரஜினி தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தி உள்ளது. எனவே ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கோலிவுட்டில் ரூ.1000 கோடியை தட்டி தூக்கி விடும் என்று நம்பப்படுகிறது. இதன் பின்னர் ரஜினி, சுந்தர். சி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அதன் பிறகு மீண்டும் நெல்சன் உடன் கைகோர்த்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கமல்ஹாசனும் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சுகள் அடிபடுகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2027 இல் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும்
இந்த படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்துகொள்ள ரஜினியே அறிவிக்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


