spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவ.2ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை..

நவ.2ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை..

-

- Advertisement -
LVM Rocket
எல்.வி.எம் -3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதையொட்டி பழவேற்காடு மீனவர்கள் வருகிற நவ.2ம் தேதி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான இஸ்ரோ, பல்வேறு செயற்கை கோள்களை எஸ்.எஸ்.எல்.வி., பிஎஸ்எல்வி, எல்.வி.எம் உள்ளிட்ட பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகிறது. அந்தவகையில் வருகிற நவ.2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் ஜிசாட்-7 என்றழைக்கப்படும் சி.எம்.எஸ் – 03 செயற்கைகோளை ஏவவுள்ளது. ஞாயிறு மாலை 5.26 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம் ராக்கெட் ஏவப்படவுள்ளது.

இதற்கான இறுதிகட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நாளை (நவ1) மாலை 5.26 மணிக்கு கவுண்டவுன் தொடங்குகிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காணும் வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் 10 ஆயிரம் பேருக்கான பார்வையாளர் மாடம் தயார் செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலை கான விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கல் lvg.shar.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அத்துடன் ராக்கெட் ஏவுதலையொட்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வருகிற 2ம் தேது கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

MUST READ