சியான் 63 படத்திற்காக நடிகர் விக்ரம் அறிமுக இயக்குனருடன் கைகோர்க்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் அடுத்தது தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக சியான் 63 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. அதாவது மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களின் இயக்குனர் மடோன் அஸ்வின் தான் ‘சியான் 63’ படத்தை இயக்கப்போவதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கிஸ் நிறுவனம் அறிவித்தது.

அதன் பிறகு மடோன் அஸ்வினின் கதையில் தயாரிப்பாளருக்கும், விக்ரமுக்கும் திருப்தி இல்லாத காரணத்தால் ‘சியான் 63’ படத்தின் இயக்குனர் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மடோன் அஸ்வினுக்கு பதிலாக இந்த படத்தை அறிமுக இயக்குனர் போடி K ராஜ்குமார் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அறிவிப்பு போஸ்டரில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடி K ராஜ்குமார், கிட்டத்தட்ட மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அதில் இரண்டு குறும்படங்கள் விருதுகளை வென்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர ‘சியான் 63’ படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழு வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.


