ஏகே 64 படத்தின் டைட்டில் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் அடுத்தது தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவருடைய 63வது படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இவருடைய சினிமா கேரியரில் அதிக வசூலை அள்ளியது. அதே சமயம் அந்த படத்திலேயே அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏகே 64 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராகுல் தயாரிக்கப் போகிறார் என்றும் அனிருத் இசை அமைக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர மோகன்லால், சுவாசிகா, ஸ்ரீலீலா ஆகியோர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதன் படப்பிடிப்புகளும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நவம்பர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ‘ஏகே 64’ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாக இருக்கிறதாம். அடுத்தது இந்த படத்திற்கு ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு அதே டைட்டில் தான் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. மேலும் ஏதோ ஒரு மொழியில் மட்டும் அதே டைட்டில் மற்றொரு படத்திற்கும் இருக்கும் நிலையில் அந்தப் படக்குழுவிடமிருந்து NOC வாங்க ‘ஏகே 64’ படக்குழு முயற்சி செய்திருந்த நிலையில், தற்போது அந்த NOC -ஐ படக்குழு பெற்றுவிட்டதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


