‘மகுடம்’ பட படப்பிடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷாலின் 35 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் ‘மகுடம்’. இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷால் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். இவருடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் சில மாற்றங்கள் நடந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் இந்த படமானது ‘ஈட்டி’ படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வந்தது.
ஆனால் இயக்குனருக்கும், விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஷால் இந்த படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் ரவி அரசு கதையில் தான் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரவி அரசிடமிருந்து NOC பெறாத காரணத்தால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர்கள் சங்கமும், பெப்சி அமைப்பும் நிறுத்தி வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன் பிறகு NOC பெற்றுவிட்டதாகவும், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
Vishal’s’ Directoral Debut movie Magudam/Makutam Climax goes Massive,
Intense Action at its Peak with 100 Stunt Men and 800 Crew Members,#Magudam #Makutam #Vishal #DirectorVishal #BTS #ShootModeOn pic.twitter.com/6II2ZFKcR0
— Vishal Film Factory (@VffVishal) November 1, 2025

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ‘மகுடம்’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி 100 ஸ்டண்ட் மாஸ்டர்களுடனும், 800 படக்குழுவினருடன் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.


