நடிகர் கவின், அரசன் படம் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் கவின் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் ஹாய், கவின் 09 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர், வெற்றிமாறன் தயாரிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்க் திரைப்படத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி பொலிடிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படமானது வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படப்பிடிப்புகள் நிறைவடைந்து ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட கவின், வெற்றிமாறனின் ‘அரசன்’ படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “அரசன் படம் பற்றி எனக்கு எல்லாமே தெரியும். இது ஒரு தரமான படமாக இருக்கும். வெற்றி சார் ரசிகர்கள், சிம்பு சார் ரசிகர்கள், என் தலைவன் அனி சார் ரசிகர்கள் எல்லோருக்கும் இது ஒரு முழுமையான திருப்திகரமான படமாக இருக்கும். இந்த புதிய அற்புதமான காம்போவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘வடசென்னை’ படத்தின் யூனிவர்ஸாக உருவாக இருக்கும் அரசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், கவின் பகிர்ந்த இந்த தகவலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


