‘பெடி’ படத்திலிருந்து ‘சிகிரி சிகிரி’ பாடல் வெளியாகி உள்ளது.
ராம் சரணின் 16வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பெடி’. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், அடுத்தது ரசிகர்கள் ‘பெடி’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை ‘உப்பெனா’ படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். ரத்ன வேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படத்தில் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சிகிரி சிகிரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலானது ராம்சரண் – ஜான்வி கபூர் ஆகிய இருவருக்குமான காதல் பாடலாகும். இந்த பாடலில் ராம் சரண் அட்டகாசமாக நடனமாடி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


