இனி, கவலை வேண்டாம்…. சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? எளிய வழிகள் இதோ…
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணியை’ (SIR) தொடங்கியுள்ளது. எனவே வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா? என சரிபாா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். உங்கள் பெயர் அல்லது உங்கள் பெற்றோர், உறவினர்களின் பெயர் இன்னும் பட்டியலில் உள்ளதா என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா இனி, கவலைப்பட வேண்டாம். ஆன்லைனில் சில எளிய வழிகள் மூலம் நீங்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
தமிழக வாக்காளா் பட்டியலில் உங்களது பெயரை சரிபாா்க்கும் எளிய வழிமுறைகள்:-

ஸ்டெப் 1:
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://elections.tn.gov.in/Electoral_Services.aspx க்குச் செல்லவும்.”Special Intensive Revision – 2002/2005″ என்பதை கிளிக் செய்யவும். இப்போது, “Search your name in electoral roll” (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: தேடல் விருப்பங்கள்
உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும். EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை), விவரங்கள் மூலம் தேடுதல், மொபைல் எண் மூலம் தேடுதல்
விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல்
உங்களிடம் ஏற்கெனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும். உங்கள் EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும். மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து ‘தமிழ்நாடு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும். “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்
உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம். “Search by details” என்பதைக் கிளிக் செய்யவும். மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்:
உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்), பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி), பாலினம் மாவட்டம் மற்றும் தொகுதி, Captcha குறியீட்டை நிரப்பி, “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல்
உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும். “Search by Mobile” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும். Captcha குறியீட்டை நிரப்பி, “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு, “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும். இந்த ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (SIR), தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, இதுபோன்ற பிரச்சனைகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


