மழைக்கால வறட்டு இருமலுக்கான 10 சிறந்த தீர்வுகள்.
மழைக்காலம் தொடங்கியவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் இந்த வறட்டு இருமலை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. தூங்கும் போதும் கூட இந்த வறட்டு இருமல் தொல்லை இருக்கும். மேலும் வறட்டு இருமலால் சரியாக சாப்பிடவும் முடியாது. எனவே இதற்கு வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.

1. தேன் மற்றும் சூடான நீர்
அரை கப் அளவு சூடான நீரில் ஒரு ஸ்பூன் அளவு தேன், ஒரு சிட்டிகை மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து மெது மெதுவாக குடித்து வர தொண்டை உலர்ச்சி குறையும். அத்துடன் சளியும் தளர்ந்து வறட்டு இருமல் குறையும்.
2. துளசி – ஓமம் கசாயம்
துளசி, ஓமம், மஞ்சள் தூள், தேன் ஆகியவற்றை சேர்த்து ஒரு கசாயம் போல தயாரித்து குடிக்கலாம். இந்த கசாயம் தொண்டை எரிச்சலை குறைத்து வறட்டு இருமலுக்கு தீர்வு தரும்.
3. வெங்காயச் சாறு மற்றும் தேன்
சிறிதளவு வெங்காயச் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை எடுத்துக்கொண்டால் தொண்டையில் உள்ள சளி கரைந்து வறட்டு இருமல் குணமாகும்.
4. தேங்காய் பால் மற்றும் மிளகுத்தூள்
அரைக்கப் அளவு தேங்காய் பால், அரை ஸ்பூன் அளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து குடிக்க வறட்டு இருமல் தீரும். (தேங்காய் பாலை சூடான நீரில் எடுத்தால் நல்லது)
5. இஞ்சி மற்றும் தேன்
அரைத்து வைத்த இஞ்சியில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து எடுத்துக் கொண்டால் தொண்டையில் ஏற்படும் எரிச்சல் குறையும். இதன் மூலம் வறட்டு இருமல் குணமாகும்.
6. பூண்டு மற்றும் நெய்
ஒரு சிறிய பல் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நெய்யில் சுட்டு நசுக்கி சாப்பிட்டால் தொண்டை உலர்ச்சி குறைந்து தொற்று நீங்கி வறட்டு இருமல் குணமடையும்.
7. வறுத்த கடலை மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் அளவு வறுத்த கடலையை பொடியாக அரைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து சாப்பிட தொண்டைச்சளி கரையும். இது குழந்தைகளுக்கும் இயற்கையான தீர்வு தரும்.
8. கற்பூரவல்லி இலை
ஒரு கற்பூரவல்லி இலையை நசுக்கி அதன் சாறு எடுத்து தேனுடன் கலந்து குடித்து வர தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
9. நெல்லிக்காய் மற்றும் தேன்
நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து எடுத்துக்கொண்டால் தொண்டை கரகரப்பு குறைந்து வறட்டு இருமல் அடங்கும்.
10. வெந்தய நீர்
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதை காலையில் குடித்து வர தொண்டை உலர்ச்சி குறைந்து வறட்டு இருமல் தணியும்.
இருப்பினும் இருமல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


