நடிகை ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகை ஸ்ரீலீலா, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘குண்டூர்காரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அடுத்தது அஜித்தின் ‘ஏகே 64’ படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ படத்தை முடித்திருக்கிறார். அடுத்தது சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த இரண்டு படங்களின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணியிலான புதிய படம் குறித்த அப்டேட்கள் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 10ஆம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் தொடங்க இருக்கிறதாம்.
அதாவது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதிவரை சென்னையில் நடைபெறும் என்றும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு 2026 பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் ராஷ்மிகா இந்த படத்தில் கமிட்டாகி இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, ஸ்ரீலீலா இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


