ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மகாநதி, ரகு தாத்தா போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி ரிவால்வர் ரீட்டா எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை சந்துரு இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் தினேஷ் கிருஷ்ணன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் தவிர ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தை ரௌடி கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார்? என்பதுதான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.


