ரஜினி பட விவகாரம் குறித்து ரசிகர் போட்ட மீம்ஸ்க்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் 173 ஆவது படத்தை, அதாவது தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும், அதனை கமல்ஹாசன் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் 2027 பொங்கலுக்கு திரைக்கு வரும் எனவும் படக்குழு வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஒரு சில நாட்களிலேயே அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது. அதன்படி, சுந்தர்.சி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் வெளியிட்ட இந்த அறிக்கை, ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் தெரியாமல் நடந்தது, ரஜினிக்கு சுந்தர்.சியின் கதையில் திருப்தி இல்லை, கமல்ஹாசன், கதையில் தொடர்ந்து திருத்தங்கள் செய்ய சொன்னதால் தான் சுந்தர்.சி படத்திலிருந்து விலகி விட்டார் என பல காரணங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரசிகர் ஒருவர் “ஒருவேளை ரஜினி, தலைவர் 173 படத்தில் குஷ்புவுடன் ஐட்டம் டான்ஸ் ஆட கேட்டிருப்பாரோ? அதனால் சுந்தர்.சி விலகியிருக்கலாம்” என்று மீம்ஸ் போட்டிருந்தார். அதற்கு குஷ்பு, “இல்லை உங்க வீட்ல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்” என்று சாட்டையடி பதில் கொடுத்துள்ளார். குஷ்புவின் இந்த பதில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


