கருப்பு படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கருப்பு’. இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் சூர்யா வக்கீலாக நடிக்க இவருடன் இணைந்து திரிஷா, ஆர்.ஜே. பாலாஜி, யோகி பாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பும் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி 23ஆம் தேதி அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதாவது ‘GOD MODE’ என்ற தலைப்பில் வெளியான இந்த படத்தின் முதல் பாடலின் வரிகள் சிலருக்கு புரியவில்லை என்று விமர்சித்தாலும், இன்னும் சிலர் இந்த பாடலை வெறித்தனமான பாடலாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி விரைவில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Blasttt 💥💥💥 … next update soon ! https://t.co/LMdcv1XuQO
— abhyankkar (@SaiAbhyankkar) November 16, 2025

இது தொடர்பாக இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ப்ளாஸ்ட்… அடுத்த அப்டேட் விரைவில்” என்று குறிப்பிட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.
எனவே இந்த பாடல் என்ன மாதிரியான பாடலாக இருக்கும்? என ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்து பார்க்க தொடங்கி விட்டார்கள்.


