spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை மாட்டிவிட்ட வீடியோ! மேடையில் கதறிய ஆதவ் - புஸ்ஸி! தவெக அரைவேக்காடு ஆர்ப்பாட்டம்! உமாபதி...

விஜயை மாட்டிவிட்ட வீடியோ! மேடையில் கதறிய ஆதவ் – புஸ்ஸி! தவெக அரைவேக்காடு ஆர்ப்பாட்டம்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தவெக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், விஜய்க்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், அவர் மற்றவர்களை எழுதி கொடுப்பதை படிக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பாக தான் இருந்தது. தற்போது அது பாஜகவின் ஒரு கிளையாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் தவெகவினர் யாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே எதற்காக வந்தோம் என்று தெரிந்திருக்காது போல. கடைசி நேரத்தில் ஆயிரம் பேர் கிளம்பி வந்துள்ளனர். கடைசி வரை விஜய் வராததால் கோபத்தில், சென்டர் மீடியனை எல்லாம் உடைத்துவிட்டார்கள். போராட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு புறம்பாக பல்வேறு தகவல்களை பரப்பினார்.

ஆதவ் அர்ஜுனா ஒரு காரிய கிருக்கன். மாமனார் காசை திருடி, அதை 4 கட்சிக்கார்களுக்கு கொடுத்து கட்சியை திருடிவிடலாம் என அவர் நினைக்கிறார். இந்த போராட்டம் எல்லாம் அதற்காக செய்வதுதான். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மூலம் திமுக நடத்துவதாக நினைத்துக் கொண்டு தவெகவினர் போராடுகிறார்கள். அதற்கு முன்பாக விஜய், திமுகவினர் எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவம் கிடைக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு இந்த விவகாரங்கள் எல்லாம் தெரியாது. யாராவது எழுதி கொடுத்திருப்பார்கள். அதை அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்க தவெகவுக்கும் அழைப்பு விடுக்க கோரி 6 பக்க கடிதம் எழுதிய விஜய், அதனை தவறாக மாநில தேர்தல் ஆணைய முகவரிக்கு அனுப்பியுள்ளார். விஜய்க்கு தெரியவில்லை என்பதை தாண்டி, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியினர் ஒருவருக்கும் கூட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்கிற விவரம் தெரியவில்லை. முன்பு விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

விஜயகாந்துக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தது போன்று விஜய்க்கு ஆலோசனை சொல்ல ஒரு மூத்த அரசியல்வாதி இல்லை என்பது ஒரு குறையாக தோன்றலாம். விஜய் அரசியலுக்கு புதியவர் என்பதால், அவரிடம் மூத்த தலைவர்கள் யாரும் வர மாட்டார்கள். எம்.ஜி.ஆர் நீண்ட காலம் திமுகவில் பயணித்தவர். அதற்கு முன்பாக காங்கிரசில் இருந்தவர். கட்சியை தெரியும். பேச்சாளராக இருந்துள்ளார். அவர் நேரடியாக அரசியலில் குதித்து வரவில்லை. எம்ஜிஆருடன் அனுபவம் வாய்ந்த  நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.எஸ் போன்ற தலைவர்கள் வந்தார்கள். அவர்கள் அறிவுஜீவிகளாக இருந்து அரசியல் செய்தனர். ஆனால் விஜய், நான்கு தற்குறிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்?

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் தங்களுடைய அரிப்பை போக்கிக்கொள்ள எதற்கெடுத்தாலும் திமுக தான் என்று சொல்வார். அவருடைய வீட்டில் பிரச்சினை என்றாலும் திமுக தான் என்று சொல்வார். ஆதவிடம் கட்சி செலவுக்கு காசு வாங்கியதால் விஜயும் ஒன்று சொல்ல முடியாது. ஆதவ் தன்னுடைய மாமனார் காசை பிடிங்கி வந்து, இங்கே செலவு செய்கிறார். எனவே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட முடியாத சூழலில் விஜய், ஆதவ் உள்ளனர்.தவெகவை பொருத்தமட்டில் இவர்களுக்கு இந்த வேலை என்று கிடையாது. அனைத்து வேலைகளையும் எல்லோரும் தோன்றுகிறபடி செய்கிறார்கள். தவெக சமூக ஊடக பிரிவினர் உங்களின் வாக்குகளை காப்பாற்ற திமுக வராது. விஜய் தான் வருவார் என்று பதிவிடுகிறார்கள். அவர் வீட்டை விட்டே வெளியே வராதநிலையில், இதனை பதிவிடுகிறார்கள்.

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், விஜய் விரைவில் வெளியே வருவார் என்றும், எஸ்ஐஆர் குறித்து விளக்கி விஜய் போட்ட பதிவை ஒரே நாளில் 3 கோடி பேர் பார்த்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். விஜய் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தேர்தல் ஆணைய சர்வர் முடங்கும் அளவுக்கு எல்லோரும் விண்ணப்பிப்பதாக கூறியுள்ளார்.  பட்டிமன்ற பேச்சாளரான ராஜ்மோகனுக்கு தவெகவில் பதவி கொடுத்துள்ளதால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவார். தற்போது தான் அவர் அரசியலுக்குள் வர தொடங்கியுள்ளார். நல்ல பேச்சாளரான அவர், அரசியலுக்குள் வந்தால் அதற்கேற்றார் போல மாறித்தான் ஆக வேண்டும். இனி பெரிய தலைவராகி விடுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ