spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிவேக்கை மீண்டும் உயிர்ப்புடன் கொண்டு வரும் ஷங்கர்!?

விவேக்கை மீண்டும் உயிர்ப்புடன் கொண்டு வரும் ஷங்கர்!?

-

- Advertisement -

‘இந்தியன் 2’ படத்தின் விவேக் காட்சிகளை மீண்டும் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 தற்போது மீண்டும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.  ‘இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பு தைவான், தென் ஆப்பிரிக்கா என மும்மரமாக நடைபெற்று வருகிறது.

we-r-hiring

தென்னாப்பிரிக்காவில் மிகப் பிரமாண்டமான முறையில் ஒரு ட்ரெயின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் விவேக் அவர்கள் காலமானார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் விவேக் சில காட்சிகளில் நடித்திருந்தார். மற்றும் மலையாள நடிகர் நெடுமுடி வேணுவும் நடித்து வந்தார். தற்போது இருவரும் காலமாகிவிட்டதால் அவர்கள் நடித்த காட்சிகள் என்ன ஆகும் என்ற கேள்வி இருந்து வந்தது.

தற்போது கிராபிக்ஸ் மூலம் இருவரையும் மீண்டும் திரையில் கொண்டு வர படக் குழுவினர் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே பிரத்யேக தொழில்நுட்பக் குழுவை தயார் செய்து வருகிறாராம் சங்கர். விவேக்கை மீண்டும் திரையில் பார்த்தால் ரசிகர்கள் எமோஷனல் ஆவார்கள் என்பது நிச்சயம்.

இந்தியன் 2’ படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

MUST READ