பிரபல நடிகை ஒருவர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் வெளியான ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தவிர மகேஷ் பாபு .பி இயக்கத்தில் ‘ஆந்திரா கிங் தாலுகா’ எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர், தனுஷ் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “எனக்கு தனுஷ் சார் ரொம்ப பிடிக்கும். எல்லா நடிகைகளுக்குமே தனுஷ் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற ஆசை இருக்கும். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென கனவு காண்கிறேன். விரைவில் அவருடன் ஒரு தமிழ் படத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதேசமயம் D54 திரைப்படமும் உருவாகி வருகிறது. இதற்கிடையில் தனுஷ், D55, D56, இளையராஜா மற்றும் அப்துல் கலாம் பயோபிக் போன்ற ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


