spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெரிதாக வெடித்த 'வாரணாசி' டைட்டில் சர்ச்சை.... பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!

பெரிதாக வெடித்த ‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை…. பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!

-

- Advertisement -

வாரணாசி டைட்டில் சர்ச்சை தொடர்பாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.பெரிதாக வெடித்த 'வாரணாசி' டைட்டில் சர்ச்சை.... பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!

தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது சுமார் ரூ.1200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் தொடங்கி ஒடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியிலும் சில காட்சிகளை படமாக படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பெரிதாக வெடித்த 'வாரணாசி' டைட்டில் சர்ச்சை.... பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!இது தவிர இந்த படம் 2027 மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் ராஜமௌலி, கடவுள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், அனுமன் துணை நிற்பார் என்று தனது தந்தை கூறியபோது கோபம் வந்ததாகவும் கூறியிருந்தார். ராஜமௌலியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜமௌலி சொன்னது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக சரூர்நகர் காவல் நிலையத்தில் ராஷ்டிரிய வனரசேனா அமைப்பு புகார் அளித்துள்ளது. ராஜமௌலி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிதாக வெடித்த 'வாரணாசி' டைட்டில் சர்ச்சை.... பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!இப்படி ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ‘வாரணாசி’ பட தலைப்பிற்கும் சிக்கல் வந்துள்ளது. அதாவது இந்த தலைப்பு தங்களுடையது என ராமபிரம்ம ஹனுமா கிரியேஷன்ஸ் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. வேறு படத்திற்கு பதிவு செய்த தலைப்பை அனுமதி இல்லாமல் எப்படி பயன்படுத்தலாம்? என்று அந்த புகார் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கும் இந்த படத்தின் தலைப்பு இனிவரும் நாட்களில் மாற்றப்படுமா? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. தற்போது இது தொடர்பான கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த விவகாரம் தொடர்பாக ராஜமௌலியும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ