spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாங்கிரஸ் தவெக கூட்டணி ரகசியம்! விஜயை அழைத்த அந்த தலைவர்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

காங்கிரஸ் தவெக கூட்டணி ரகசியம்! விஜயை அழைத்த அந்த தலைவர்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை உடைக்கும் அசைன்மெண்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக வழங்கியுள்ளதாகவும், அதனை அவர் பல்வேறு ஊடகங்கள் மூலம் செயல்படுத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

காங்கிரஸ் – தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெளியாகி வரும் தகவல்களின் முழுமையான பின்னணியை விளக்கி மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கேரளாவில் அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ரமேஷ் சென்னிதலா, சதீஷ் போன்றவர்களுக்கு முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள கே.சி.வேணுகோபாலுக்கும் கேரளா முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. கேரளா சட்டமன்றத் தேர்தலில், விஜய் தனக்கு  ஆதரவளித்தால் 3 சதவீதம் வாக்குகள் வரை கிடைக்கும் என கே.சி.வேணுகோபால் நினைக்கிறார். கரூர் சம்பவத்தின்போது அவர் மூலமாக தான் விஜய், ராகுல்காந்தி உடன் பேசினார். பின்னர் ராகுல்காந்தி, ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டதால் விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் என்கிற வாதத்தின் மற்றொரு பகுதி இதுவாகும்.

காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி என்பவர், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடன் வீட்டில் அமர்ந்து பேசுகிறபோது, உதயநிதி குறித்தும், மற்றவர்கள் குறித்தும் மிகவும் சாதாரணமாக பேசியுள்ளார். அவர் உள்நோக்கத்துடன் பேசவில்லை. ஆனால் பேசியவை சரியா என்று கூட சரிபார்க்கவில்லை. அதை ரெக்கார்டு செய்து பிரசாந்த் பூஷன் வாயிலாக அண்ணாமலை, சவுக்கு சங்கர் ஆகியோரிடம் கொடுத்து வெளியிட்டு திமுகவில் பெரிய பிரச்சினை செய்தார். பிரவீன் சக்ரவர்த்தி மயிலாடுதுறை எம்.பி தொகுதி கேட்டபோது திமுக வழங்க வில்லை. சுதா என்கிற வழக்கறிஞரை நிறுத்தி வெற்றி பெற வைத்தார்கள். இந்நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோர் ஓரணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோர், காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்று வதந்திகளை பரவவிட்டனர். அதையே தற்போது தொடர்கிறார்கள். விஜயுடன், பிரியாங்கா காந்தி பேசிவிட்டார் என்பது வரை அவர்கள் சொல்கிறார்கள்.

மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது - எம்.பி ஜோதிமணி

இந்த விவகாரத்தில் மற்றொருபுறம் பார்த்தால் தவெக தரப்பில் விஜய், காங்கிரசுடன் கூட்டணிக்கு செல்கிறார் என்று வதந்திகளை பரப்புவது ஆதவ் அர்ஜுனா, பாஜக. ராகுல்காந்தி, விஜய் பேசிய விவகாரத்தை பிரவீன் சக்ரவர்த்தி குழுவினர் கசிய விட்டனர். அதை ஆதவ் அர்ஜுனா, பாஜக பெரிய அளவில் பரப்புவார்கள். ஒரு முறை விமானத்தில் வருகிறபோது கலாநிதி வீராசாமி முன்பாக வழக்கறிஞர் சுதா, பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் காங்கிரஸ், தவெக கூட்டணி குறித்தும், திமுக கூட்டணியை உடைப்பது குறித்தும் பேசியுள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்த கலாநிதி வீராசாமி இருக்கையில் இருந்து பின்னால் எழுந்து சென்று அமர்ந்துள்ளார். மற்ற எந்த மாநிலத்தையும் விட காங்கிரசுக்கு 10 எம்.பி.க்கள், பல எம்எல்ஏக்களை விட்டுக்கொடுத்தது திமுக அரசுதான். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நன்றியுணர்வோடு இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் இருந்திருந்தால் செல்வப் பெருந்தகையை மீறி ஜோதிமணி பேசுவாரா? சசிகாந்த் செந்தில், கிரிஷ் ஜுடங்கர், பால், ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்களாக செயல்பட்டவர்கள்.

காங்கிரஸ், திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் ஆதவ் அர்ஜுனாவுக்கு அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளது. அவருடைய வாய்ஸ்ஆஃப் காமன் அமைப்பின் மூலம் இதை செய்து வருகிறார். ஆனால் இந்த கூட்டணி விவகாரங்கள் தொடர்பான வதந்திகளுக்கும், விஜய்க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ், திமுக கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது ராகுலும், ஸ்டாலினும் தான். அவர்கள் முடிவு எடுக்கும்போது இந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் இவை எல்லாம் உண்மை கிடையாது. வெறும் பிரச்சாரம் மட்டுமே. தினத்தந்தி நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியில், விஜய் மிகவும் டென்ஷன் ஆக இருக்கிறார். அவருக்கு பாஜகவை பிடிக்கவில்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர தான் காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிமுக கூட்டணி வைப்பதற்கான சாக்குபோக்கு போன்றதுதான். திமுகவை பொருத்த வரை விஜய் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி சென்றால் அவர் பாஜகவின் பி டீம் என்பது அம்பலப்பட்டு விடும். அதோடு விஜய் காலியாகி விடுவார். விஜய், ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் மற்றும் திமுகவுக்கு செல்கிற சிறுபான்மையினரின் வாக்குகளை தான் நம்பியுள்ளார். ஒருவேளை அவர் என்டிஏ கூட்டணிக்கு சென்றால் அந்த வாக்குகள் அவருக்கு கிடைக்காது.

அதிமுக, பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்பதை பாஜகவே ஏற்றுக்கொள்கிறது. டிடிவி தினகரன் போன்றவர்கள், எடப்பாடி உடன் தான் வந்தாக வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பிரேமலதாவை சந்தித்து பேசியது என்பது அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருகிற முயற்சி தான். தேமுதிக அதிமுக முகாமுக்கு வரும் என்றுதான் சொல்கிறார்கள். அதிமுக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறது. திமுக தங்களிடம் உள்ள கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதுடன், கூடுதல் கட்சிகளையும் சேர்க்க முயற்சிக்கிறது. கமல், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் கூடுதலானவர்களாகும். அதேபோல், வைத்திலிங்கமும் வர வாய்ப்புகள் உள்ளன. நெல்லையில் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் திமுகவில் சேர்க்கிறார்கள். அதிமுகவில் இருப்பவர்களை திமுகவில் சேர்க்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. தங்களுடைய கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் திமுகவின் முயற்சியாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ