இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 பட அப்டேட் கிடைத்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா, சுவாதி ஆகியோரின் நடிப்பில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ எனும் திரைப்படம் வெளியானது. கோகுல் இயக்கியிருந்த இந்த படம் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘சுமார் மூஞ்சி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்ற வசனம் ஃபேமஸான வசனம் ஆகும்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதாவது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாகம் 2’ திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இதில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்க உள்ளார் எனவும், இந்த படமும் முதல் பாகத்தை போல் நகைச்சுவை கலந்த ஜானரில் இருக்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
- Advertisement -


