இயக்குனர் நெல்சன், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அதை தொடர்ந்து இவர் ‘டாக்டர்’ என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார். இவருடைய ‘பீஸ்ட்’ திரைப்படம் சரிவை சந்தித்த போதிலும் ‘ஜெயிலர்’ என்ற தரமான படத்தை கொடுத்து இந்திய அளவில் பிரபலமானார். அதன் பின்னர் மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு நெல்சன், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
#Nelson Recent
– I like #VijaySethupathi sir so much. In each of my films, I try to work with him.
– #Anirudh also said, “Nelson, you should do a film with #VJS.”
– It will happen soon.#Jailer2 #Thalaivar173pic.twitter.com/YXwkpjIYxc— Movie Tamil (@_MovieTamil) November 27, 2025

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெல்சன், விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “எனக்கு விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு படங்களிலும் அவருடன் பணியாற்ற முயற்சி செய்கிறேன். அது ரொம்ப சீக்கிரம் நடக்கணும். விஜய் சேதுபதியுடன் படம் பண்ணனும்னு அனிருத்தும் என்னிடம் சொல்லுவாரு” என்று கூறினார்.
#VijaySethupathi about #Nelson 🔥
– I like the writing style of Nelson.
– The way he writes characters in his films is very unique.
– I have watched #Jailer 6 to 8 times; I like Jailer so much.#Jailer2 #Rajinikanth #Thalaivar173pic.twitter.com/EVk03ci89M— Movie Tamil (@_MovieTamil) November 27, 2025
அதற்கு விஜய் சேதுபதி, ” நெல்சனின் ரைட்டிங் எனக்கு பிடிக்கும். அவர் எழுதும் விதம் தனித்துவமாக இருக்கும். நான் ஜெயிலர் 2 படத்தை 6 முதல் 8 முறை பார்த்திருக்கிறேன். ஜெயிலர் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதற்கிடையில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்புகளை எக்கசக்கமாக அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


