spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் கேம்' படத்தின் முக்கிய அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிக்கும் ஐ அம் கேம் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் கேம்' படத்தின் முக்கிய அறிவிப்பு!

பான் இந்திய நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் கடைசியாக ‘காந்தா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்த இந்த படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் இவர, ஐ அம் கேம் எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தை ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இயக்குகிறார். இந்த படத்தை துல்கர் சல்மானின் வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மிஸ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் கேம்' படத்தின் முக்கிய அறிவிப்பு!துல்கர் சல்மானின் 40வது படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை (நவம்பர் 28) மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ