கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை இயற்கையிலேயே சரி செய்யும் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் என்பது பொதுவாக ஹார்மோன்கள் சமநிலையின்மையாலும், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகக்கூடும். இது இன்று உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெரும்பாலான பெண்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் இந்த நீர்க்கட்டி பிரச்சனைக்கு சிகிச்சை தேவைப்படாது. ஆனால் நீர்கட்டிகள் பெரிய அளவில் இருப்பின் அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையினால் இயற்கையிலேயே சில வழிகளின் மூலம் நீர்க்கட்டிகளை சரி செய்ய முயற்சி செய்யலாம்.

1. முதலில் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. இனிப்பு வகைகள், எண்ணெய் சார்ந்த பொருட்கள், கொழுப்பு நிறைந்த பொருட்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நீர்க்கட்டிகளை சரி செய்யும் வழிமுறைகள்
1. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2. குறைந்தது 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.
3. தினமும் ஒரு எள்ளுருண்டை சாப்பிடலாம். இதில் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.
4. ஒரு கப் சூடான நீரில் அரை ஸ்பூன் அளவு சீரகப் பொடி சேர்த்து ஒரு நாளைக்கு ஒருமுறை குடிக்கலாம்.
5. காலை அல்லது மாலையில் ஆளி விதை பொடியை ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது ஈஸ்ட்ரோஜனை பேலன்ஸ் செய்ய உதவும்.
குறிப்பு:
இந்த முறைகள் எல்லாம் சாதாரண, குறைந்த அளவிலான நீர்க்கட்டியை மட்டுமே கரைக்கும். பெரிய அளவிலான கட்டிகளை சரி செய்ய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


