spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!

பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!

-

- Advertisement -

சென்னையில் சூப்பா் மாா்கெட்டில் பொருட்களை வாங்குவது போல வந்த நபா் செல்போனை திருடிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் கடையில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கடையில் இருந்த செல்போனை திருடிச் சென்றார். இந்த காட்சிகள்  கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

செல்போன் காணாததால் கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன்(21), சிசிடிவியில் பார்த்தபோது  கடைக்கு வந்த வந்த நபர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளோடு சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

புகாரின் பேரில் சேலையூர் போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து செல்போன் திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்…. பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்!!

MUST READ