spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் கெடுபிடி... மியூட் செய்யப்பட்ட அண்ணாவின் வசனங்கள்...

பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் கெடுபிடி… மியூட் செய்யப்பட்ட அண்ணாவின் வசனங்கள்…

-

- Advertisement -

பராசக்தி படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும் முன்பு படத்தில் 27 இடங்களில் ஹிந்தி திணிப்பு வசனங்கள் மாற்றப்பட்டுள்ளது.பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் கெடுபிடி... மியூட் செய்யப்பட்ட அண்ணாவின் வசனங்கள்...

பராசக்தி பட்த்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி படத்தில் இடம்பெற்ற இந்தி எதிர்ப்பு கருத்துகளை பிரதிபலிக்கும் வசனங்கள் மற்றும் வார்த்தைகள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 27 இடங்களில் இந்தி திணிப்பு தொடர்பான வசனங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

படத்தில் இடம்பெற்ற அண்ணாவின் புகழ்பெற்ற புத்தக தலைப்பான ”தீ பரவட்டும்”என்ற வார்த்தைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால்  ”நீதி பரவட்டும் என்ற வார்த்தை” பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதேபோன்று, இந்தி என் கனவை அழித்தது, இந்தி அரக்கி, இந்தி கத்துக்கிட்டு, வரச் சப்பாத்தி என்ற வார்த்தைகளும் படத்தில் இருந்து நீக்கம் பெற்றுள்ளது.

மேலும், படத்தின் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட ”இந்தி” என்ற வார்த்தையை முற்றிலுமாக நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வசனங்கள் ஓசையில்லாமல் (மியூட்) செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, போராட்டக் காட்சியில் இடம்பெரும் கொடும்பாவி கொளுத்தும் காட்சி மற்றும் அதன் தெ்ாடர்புடைய காட்சிகளையும் நீக்க வேண்டும் என திணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட முழக்கங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள ”இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்ற 22 விநாடி வசனத்தையும் நீக்கியுள்ளனர்.

”இங்கு அண்ணாதுரைதான் ஆள்கிறான்”

”அந்த அச்சம் இருக்கு வரை அண்ணாதான் இந்த நாட்டை ஆள்கிறார் ” என்ற அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கங்களும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதனுடன், தபால் நிலைய பெயர் பலகையில் சாணி அடித்து எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சியை நீக்க தணிக்கை வாரியம் கெடுபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… அன்புமணி கருத்துக்கு எம்.ஆர்.கே பாய்ச்சல்

MUST READ