Homeசெய்திகள்கட்டுரைவிஜய் மூலம் டிடிவிக்கு விரித்த வலை! அடுத்து விழவிருக்கும் முக்கிய தலை! உண்மையை உடைக்கும் தாமோதரன்...

விஜய் மூலம் டிடிவிக்கு விரித்த வலை! அடுத்து விழவிருக்கும் முக்கிய தலை! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

ஜனநாயகன் மற்றும் சிபிஐ விசாரணைகளால் தவெக அரசியலில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் சூழலை பயன்படுத்தி பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. பாஜக 2021ஆம் ஆண்டிலேயே தினகரனை என்டிஏவில் சேர்க்க வேண்டும் என ஆசைப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அதன் காரணமாக தான் திமுக ஆட்சிக்கு வந்தது. தினகரன் 2021ல் 4.5 சதவீதம் வாக்குகள் வைத்திருந்தார். தற்போது அவருக்கு 0.95 சதவீதம் வாக்குகள் இருப்பதாக அதிமுகவே சொல்கிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் டெல்டா மண்டல தளபதி வைத்திலிங்கம் திமுகவுக்கு வந்துவிட்டார். ஓபிஎஸ்-ஐ தவிர்த்து அவரிடம் இருந்தவர்கள் எல்லாம் கரைந்துவிட்டனர். இந்த சூழலில் அதிமுகவின் 20 சதவீதம், என்டிஏவின்  18 சதவீதம் வாக்குகள் கிடைக்குமா? என்பது சந்தேகமே.

இந்த சூழலில் தினகரனை, அதிமுக கூட்டணியில் சேர்த்து 10 தொகுதிகளை கொடுத்துள்ளனர். அங்கே தினகரனின் வெற்றிக்கு அதிமுகவினர் நிச்சயம் வேலை செய்ய மாட்டார்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்காக, தினகரன் ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள். சசிகலாவின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மிரட்டி, கட்சியில் இருந்த அவருடைய ஆதிக்கத்தை பாஜகவினர் கரைத்தனர். தற்போது அவரிடம் ஆனந்தன்,  நரசிம்மன் என இரு ஆதரவாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கும் தினகரன் மூலம் சீட்டு வழங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!
Photo: TTV Dhinakaran

இதேபோல் ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. பழைய முக்குலத்தோர் வாக்கு வங்கியை மீண்டும் கொண்டு வருகிறார்கள். இந்த இணைப்பு விழாவில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார். அண்ணமலை எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்யும் நபர். டிடிவி தினகரன் கொடுத்த நம்பிக்கையில் அவர் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர இன்றைய கூட்டத்தில் இடம்பெறவில்லை. காரணம் என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வருவதை அண்ணாமலை விரும்பவில்லை. அவர் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் பெரிய ஆளாகலாம் என நினைக்கிறார். ஆனால் அவர் அப்படி கட்சி தொடங்கும்பட்சத்தில் அவர் முறைகேடாக சேர்த்த ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜக பிடுங்கிக்கொண்டு அவரை கைது செய்து விடும். எனவே அண்ணாமலை விலகி இருக்கிறார்.

பாஜகவின் 18 சதவீதம் வாக்குகளை கட்டமைத்தது அண்ணாமலை தான். அவர் இல்லாமல் இருக்கும் பாஜக என்பது, நயினார் நாகேந்திரன் நடத்திய கூட்டம் போன்றது தான். அதில் கூட்டமே இல்லாமல் இருக்கும். அதிமுக கூட்டணி என்பது நெல்லிக்காய் மூட்டை போன்றதாகும். பிரித்து கொட்டினால் எல்லாம் சிதறி ஓடிவிடும். என்.டி.ஏ., கூட்டணியில் ஓபிஎஸ் இணைவது என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. வைத்திலிங்கத்திற்கு டெல்டா மாவட்டத்தில் இருக்கும் செல்வாக்கு காரணமாகவே அவரை திமுக சேர்த்துக்கொண்டுள்ளது.

என்டிஏவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இவ்வளவு காலம் நடைபெறாமல், தற்போது நடைபெறுவது ஏன்? என்கிற கேள்வி எழலாம். அதற்கு காரணம் தவெக என்கிற கட்சி அரசியலில் இருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டு விட்டது. நடிகர் விஜய்க்கு சமகால அரசியலை எப்படி எதிர்கொள்வது என்கிற அரசியல் அறிவு கிடையாது. விஜயை பொருத்தவரை தான் ஒரு எம்.ஜி.ஆர் போன்றவர் என்றும், தமக்கு பின்னால் ஒரு மாஸ் இருப்பதாகவும் கருதுகிறார். ஜனநாயகன் பட விவகாரத்தில் தவெகவிற்கு உள்ளே இருந்தே பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரே விஜய் தான். 500 கோடியை அவர் செலவு செய்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தில் கைகட்டி, வாய்மூடி மௌனமாக இருக்கிறார்.

சிபிஐ விசாரணைக்கு மௌனம் காக்க காரணம் அவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முயற்சித்தார். அப்படி செய்தால் கன்னியாகுமரியில் விஜய் ஆதரவுடன் காங்கிரஸ் சில தொகுதிகளை வெல்லும். அப்படி விஜய் காங்கிரசோடு சேர முயற்சித்த போதுதான் அவருக்கு சிபிஐ விசாரணை வருகிறது. அவர்களுக்கு விஜய் மீது வேறு எந்த கோபமும் கிடையாது. அடுத்தபடியாக விஜய், அதிமுகவின் வாக்குகளை தான் பிரிக்கிறார். அப்படி பிரித்தார் என்றால்? திமுக வெற்றி பெற்றுவிடும். அதன் காரணமாகவே குருமூர்த்தி போன்றவர்கள் விஜய்க்கு எதிராக பேசினார்கள்.

ஜனநாயகன் படம் எப்படியாக இருந்தாலும் வெளி வரத்தான் போகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மறுஆய்வு குழுவுக்கு படம் போக போகிறது. அங்கே அவர்கள் சொல்கிற கட்களை எல்லாம்  செய்துவிட்டால் அந்த படம் வெளியாக போகிறது. ஜனநாயகன் படத்திற்கு அரசியல்வாதிகள் பலரும் விளம்பரம் செய்வதால், அது பெரிய அளவில் வசூலை ஈட்டும். அப்போது சிபிஐ விசாரணை மூலம் பாஜக கொடுக்கும் நெருக்கடிகளை விஜய் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். சிபிஐ விஜய் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்தாலும், அவரை வழக்கில் கைது செய்தாலும் அதை விஜய் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அப்போது தான் அவர் ஒரு அரசியல்வாதி.

டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைத்தபோதும், அவருக்கு முக்குலத்தோர் மக்கள் 5 சதவீதம் வாக்களித்தனர். அதேபோல் விஜய்க்கும் வாக்குகள் வரும். எனவே அவர் பாஜகவை எதிர்த்து பேசலாம் அல்லவா?. ஆனால் விஜய் எதிர்த்து பேசவில்லை. என்னை பொருத்தவரை தவெக என்கிற கட்சி முடிந்துவிட்டது. இதற்கு மேல் விஜய் வெளியில் வந்து சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட விவகாரத்திற்கு என்ன விளக்கம் சொல்வார்? கட்சி தலைமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நாஞ்சில் சம்பத், லயோலா மணி உள்ளிட்ட யாரும் பேசவில்லை. தவெக முடிந்துவிட்டதால், அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ