ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியதால் வழக்கை வாபஸ் பெறுகிறோம் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, முறைப்படி வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். திரைப்படத்தை மறுதணிக்கைக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை தொடர வேண்டிய அவசியம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதை பதிவு செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்


