spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பெப்சி உமா... குதூகலத்தில் ரசிகர்கள்!

மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பெப்சி உமா… குதூகலத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த பெப்சி உமா ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக கொடி கட்டி பறந்த தொகுப்பாளினி பெப்சி உமா.

we-r-hiring

சன் டிவியில் இவர் வாராவாரம் தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்டப்பட பாடல்  நிகழ்ச்சி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அப்போதே இவரின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம்.

பெப்சி உமா சினிமா நடிகர்களுக்கு இணையாக பிரபலமாக பார்க்கப்பட்ட காலங்கள் இருந்தன. அவர் உச்சத்தில் இருந்தபோது பல ஸ்டார் நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், கமல் ‘அன்பே சிவம்’ படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததால் அதை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த பெப்சி உமா சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்றார். அப்போது விரைவில் சின்னத் திரை நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

MUST READ