ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய் வளம், கேந்திரிய முக்கியத்துவம் ஈரானை நண்பனாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தும்… அத்தோடு, இந்தியா மீது அமெரிக்க, மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த போது நமக்கு பக்கபலமாக இருந்த நாடு ஈரான்.
உலக அரங்கில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்தியாவிற்கு ஆதரவானா நிலைப்பாட்டை எடுத்த நாடு. அந்நிய செலாவணி நெருக்கடி வந்த போதும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள துணைநின்ற, இனியும் துணை நிற்கப்போகும் நாடு ஈரான். பெட்ரோல், டாலர் பிரச்சனையா,எதுவும் பிரச்சனை இல்லை… ரூபாயிலேயே நாம் எண்ணெய் வாங்கிக்கொள்ள அறைக்கூவல் விடுத்த நாடு ஈரான்.

ஒருதலைப்பட்சமாக, போரை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துவிங்கியிருப்பதை, ஈரான் தலைவரை கொன்றருப்பதை ஒரு வலுவான பிராந்திய சக்தியாக நாம் கண்டிக்க வேண்டிய கடமை உள்ளது. அந்த தார்மீகம், அறம் எல்லாவற்றையும் கூட விடுங்கள்…
நம்முடைய நெருக்கடி காலத்தில் கை கொடுத்த ஒரு நாட்டுக்கு நன்றிபாராட்டும் விதமாகவாவது நாம் உடன் நிற்க வேண்டும். ஒரு துரோகியாக உலக அரங்கில் நாம் நிற்பதை தவிர்க்க வேண்டும். சரி அதையும் கூட விடுங்கள், இந்திய நலன்களுக்காகவாவது நாம் நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இந்திய வளர்ச்சிக்கு பங்காற்றப்போகிற ஒரு வாய்ப்பை நாம் இழந்துவிட கூடாது. எண்ணெய் வளம், கேந்திரிய முக்கியத்துவம் என எல்லாவற்றிலும் நமக்கான பன்முக வாய்ப்புகளை நாம் உறுதியாக வைத்துக்கொள்வதே, பாதுகாப்பு, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் நம்மை முன்னேற்றும், ஸ்திரப்படுத்தும்.
நம்முடைய பழைய பகைவர்கள், நம்மை ஆபத்தில் தள்ளியவர்கள், நம்மை அழிக்கத் துடித்தவர்கள், நம்மை வளரவிடாமல் தடுத்தவர்கள், ஆபத்தில் கைவிட்டவர்கள், நம்மை மதிக்காதவர்கள் எல்லாம் அவர்களின் சுயநலத்திற்காக நம்மை இப்போது நெருங்கி வரலாம், நட்பாகலாம், எதோ ஒரு நெருக்கடியில் நம்மை இறுக்கலாம். ஆனால் நாம் இதுபோன்ற சூழல்களில் குறைந்தபட்ச நடவடிக்கைகளின் ஊடாகவாவது நமது, நட்பை, நன்றியை, நலனை பறைசாற்ற வேண்டும்.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…


