Homeசெய்திகள்சென்னைஎங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - தமிழிசை சௌந்தர்ராஜன்

எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்

-

- Advertisement -

திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் ஒற்றை இலக்கு; அடுத்த வாரம் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று பாஜக  முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - தமிழிசை சௌந்தர்ராஜன்சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை  சந்தித்தபோது இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மக்களிடம் இருந்து சுமார் 45,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் தலா 500 முதல் 1000 கோரிக்கைகள் வரை வந்துள்ளன. குறிப்பாக விவசாயம் சார்ந்த தகவல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. மக்கள் பெருமளவில் இதில் பங்கெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இது ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட, மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும். இதன் வரைவு அறிக்கை பெரும்பாலும் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மக்கள் அளித்த கோரிக்கைகளில், மாநில அரசு சார்ந்த பிரச்சனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், நதிநீர் மேலாண்மை போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசு சார்ந்த கோரிக்கைகளை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடமும் நேரடியாகக் கொண்டு சேர்ப்போம்.

we-r-hiring

கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சித் தலைமைதான் வெளியிடும். எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை மிகவும் பலமாகவே உள்ளது. மத்தியில் ஆளும் அரசும், மாநிலத்தில் ஆண்ட  அரசும் இணைந்துள்ள கூட்டணி இது. எங்களுக்குள் ‘கெமிஸ்ட்ரி, மேத்தமேட்டிக்ஸ்’ என அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்பத்தில் இருப்பதைப் போல எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், சிபிஐ விசாரணை  குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விசாரணை அமைப்புகள் என்பவை தனிப்பட்ட முறையில் இயங்குபவை. சந்தேகத்திற்கு இடமானவர்களை அழைத்து அவர்கள் விசாரிப்பார்கள். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலோ அல்லது யாரையாவது விசாரணைக்கு அழைத்தாலோ உடனே அதற்கு பாஜகதான் காரணம் என்று பயந்துபோய் குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. அனைத்தும் ஜனநாயக முறைப்படி நேர்மையாகவே நடைபெற்று வருகிறது” என்றார்.

தான் போட்டியிடும் தொகுதி குறித்த கேள்விக்கு, “நான் கட்சிக்கு மிகவும் கட்டுப்பட்ட ஒரு சாதாரண தொண்டர். கட்சித் தலைமை என்னை எந்தத் தொகுதியில் போட்டியிட அறிவுறுத்துகிறதோ, அந்தத் தொகுதியில் நான் களமிறங்குவேன்” என்று தெரிவித்தார்.

எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நேற்றைய தினம் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்த அவர், “திமுகவினர் வீடுகளில் எரிவாயு அடுப்பில் சமைத்து, சாப்பிட்டு விட்டுத்தான் கேஸ் இல்லை என்று ஆர்ப்பாட்டத்திற்கே வருகிறார்கள். யாரும் கேஸ் இல்லாமல் வரவில்லை. உள்நாட்டு உற்பத்தியை 70 சதவீதம் அதிகரிக்கவும், சவாலான சர்வதேச சூழ்நிலைகளுக்கு இடையிலும் தடையின்றி எரிவாயு கிடைக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுகவினர் பொய் சொல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற உக்கிரமான ஒரு சம்பவம் தொடர்பாக அங்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நாளை செல்ல உள்ளேன். அதற்கான அனுமதிகளைக் கட்சி நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள். நேரம் கிடைத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறினாா்.

தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரம் பயன்படுத்த தடை – அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

MUST READ