Homeசெய்திகள்அரசியல்விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை

விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் 10 தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை

we-r-hiring

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முதல்வருமான பி.எஸ். குமாரசாமி ராஜா, சமூக சீர்திருத்தவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.எஸ்.மணி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடன் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் ஏமாற்றலாம், ஆனால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்தது போல தமிழ்நாட்டில் மாற்ற முடியாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே அதிகாரிகளை மாற்றியமைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் முதல் பல அதிகாரிகள் வரை ஜனநாயக முறையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் வேறு வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் அட்டவணை தொடர்பான முடிவுகள் தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் அரசியல் காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினருக்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அது நியாயமான மற்றும் ஜனநாயக முறையில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் எந்த தொகுதியில் போட்டியிடச் சொல்கிறதோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்றும், போட்டியிட வேண்டாம் என்றால் அதையும் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறினார்.

அதிமுக வெற்றி பெறும் என வெளியாகும் கருத்துக் கணிப்புகள் சூரியன் கிழக்கில் உதிக்காது மேற்கில் உதிக்கும் என்று கூறுவது போன்றதாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும் நடிகர் விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு சென்றால், இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விஜய் மௌனம் கலைக்கும் வரை வதந்திகள் ஓயாது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி!

MUST READ