AK62 திரைப்படத்தின் அப்டேட் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அஜித் படங்கள் என்றாலே அப்டேட்கள் வெளியாவதில் பெரும் தாமதம் தான். வலிமை படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் அப்டேட் கேட்டு செய்த அலப்பறைகள் நம் அனைவர்க்கும் தெரியும்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்காக அப்டேட்டை தற்போது கேட்கத் துவங்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கயிருப்பதாகவும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிவிட்டார்.
அவருக்குப் பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் இணைந்துள்ளார். ஆனால் இது தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி அன்று அஜித் 62 படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


