நடிகை ஆன்ட்ரியா 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை ஆன்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மட்டுமல்ல, பன்முகத்திறமை கொண்டவரும் கூட. அவர் எப்போதும் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர். எனவே அவரை நான் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலே அதிகம் பார்த்திருப்போம். ஆன்ட்ரியாக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.


தமிழில் ரசிகர்கள் மனம் வென்ற ஆன்ட்ரியா தற்போது தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஆன்ட்ரியா இணைந்துள்ளார். அந்தப் படத்தில் இவரது கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
இதற்கு முன்னதாக வேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கான தடாகா படத்தில்
ஆன்ட்ரியா நடித்திருந்தார். அதையடுத்து 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகில் ஆன்ட்ரியா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.


