திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதலமைச்சரும் நானும் தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசி தமிழ்நாட்டில் 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதும், 6 தனித்தொகுதி 2 பொதுத்தொகுதி என ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநிலங்களை இடம் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். கருத்தியல் சார்ந்து இயங்ககூடிய கூட்டணி விடுதலை சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ; கூட்டணி நலனும் முக்கியம். இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன்பட்டு உள்ளது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
மேலும், 200 தொகுதிக்கு மேல் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டுமென தேர்தல் பணிகளை மேற்கொள்வோம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன்இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” எனவும் திருமாளவன் கூறியுள்ளாா்.

