Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன் விருப்பம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் – வானதி சீனிவாசன் விருப்பம்

-

- Advertisement -

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன் விருப்பம்தமிழக பாஜகவை வலுவான நிலைக்குக் கொண்டு சென்ற அண்ணாமலை, சட்டமன்றத்திற்குள் நுழைவது கட்சிக்கு கூடுதல் பலத்தைத் தரும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவர் கோவை மாவட்டத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் (கோவை வடக்கு அல்லது சிங்காநல்லூர்) போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

அதிமுக – பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கட்சியின் முக்கிய முகங்கள் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும் என்பதில் வானதி சீனிவாசன் உறுதியாக உள்ளார்.

​வானதி சீனிவாசன் பேசியதாவது: ​”தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலையின் கடின உழைப்பு மிக முக்கியமானது. அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் மட்டுமல்ல, எனது விருப்பமும் கூட.”

வானதி சீனிவாசன் தற்போது கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ள நிலையில், அண்ணாமலை கோவை மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அங்கு பாஜகவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்

MUST READ