Homeசெய்திகள்இந்தியாபீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி

-

- Advertisement -

நாளந்தாவில் ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலிபீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் சீத்தலா மாதா தரிசனத்திற்காக வருவார்கள். இன்று கூட்டம் மிக அதிகமாக இருந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்துள்ளனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து, நிர்வாகக் குறைபாட்டால் நிகழ்ந்தது என அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்து போலீசாா் விரைந்து வந்து  அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு

we-r-hiring

MUST READ