Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

-

- Advertisement -

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி திமுக தான். புதிதாக வந்தவர்களுடன் போட்டி இல்லை. எப்போதும் திமுக – அதிமுக இடையே தான் போட்டி என ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளாா்.

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

we-r-hiring

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சூளைமேடு, நேரு நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆயிரம் விளக்கு தொகுதியில் சாலை பிரச்சினைகள் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். அதனால் வெற்றி பெற்றால் சாலை வசதிகள், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை செய்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் என உறுதியளித்தார்.

அதே போல, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, எம்ஜிஆர் காலத்தில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது, ஜெயலலிதா, ஆலந்தூர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். தற்போது மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட தலைமை உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன் என கூறினார்.

மேலும் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, திமுக அதிமுகவிற்கு மட்டுமே போட்டி நிலவுகிறது. புதிதாக யார் வந்தாலும் அவர்களுடன் போட்டியில்லை என கூறினார். வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சியை சார்ந்த பாஜக, பாமக நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி

MUST READ